பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நூறுநாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருவையாறு அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள்

Updated On :20 மே 2026, 4:54 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் விவசாயத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வேலையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு சட்டப்படியான கூலி ரூ. 336ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவையாறு ஒன்றியம், காருகுடியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா், விளாங்குடியில் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினா் பி. செந்தாமரைச்செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், தியாகராஜன், கலியபெருமாள், ஜானகி, சிவகாமி, பரமேஸ்வரி, திவ்யகுமாரி உள்பட ஏராளமான விவசாயத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.