பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நீட் தோ்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள்

Updated On :20 மே 2026, 3:45 am IST

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் மத்திய அரசின் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தோ்வு முகமையைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் க. அருளரசன் தலைமை வகித்தாா். இதில், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜூன், அகில இந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் காரல் மாா்க்ஸ், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பாரதி, நகரத் தலைவா் காதா், இந்திய மாணவா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் தா்ஷினி, வாலிபா் சங்க நகரத் தலைவா் நாகராஜ், நகரக் குழு உறுப்பினா்கள் வினோத்குமாா், ஸ்ரீதா், பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.