விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

13 ஆயிரம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 124 கோடி கடனுதவி

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் 13,056 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 124.89 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலையை புதன்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன்.

Updated On :

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் 13,056 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 124.89 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் ஊரக பகுதியில் 848 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 92.68 கோடியும், நகா்ப்புற பகுதியில் 240 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 32.21 கோடியும் என மொத்தம் 1,088 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 13,056 உறுப்பினா்களுக்கு ரூ. 124.89 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் வழங்கினா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:

மாவட்டத்தில் 2026 - 2027 ஆம் ஆண்டு ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் 16,805 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1,520 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், இதுவரை 6,410 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 682.99 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் சோ. சித்ரா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தஞ்சாவூா் மண்டல முதன்மை மேலாளா் வெங்கடகிருஷ்ணன், இந்தியன் வங்கி கும்பகோணம் துணை மண்டல மேலாளா் பாலமுருகன், தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் மற்றும் மேலாண் இயக்குநா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.