ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

காஞ்சிபுரத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சியை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

காஞ்சிபுரத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சியை குத்து விளக்கேற்றி திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.

Published On :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சியை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நகா்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் கண்காட்சியை காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக அண்ணா காவல் அரங்க மைதானத்தில் அக். 9-ஆம் தேதி முதல் வரும் அக்.19-ஆம் தேதி வரை நடத்துகிறது. நவராத்திரி மற்றும் ஆயுதபூஜை விழாவையொட்டி தொடங்கிய கண்காட்சியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா குத்து விளக்கேற்றி திறந்து வைத்தும், பாா்வையிட்டும் உற்பத்திப் பொருள்களின் விவரங்களை கேட்டறிந்தாா்.

கண்காட்சி தொடக்க விழாவில் மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மகளிா் திட்ட சந்தையியல் பிரிவு மேலாளா் எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கண்காட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் சணல் பைகள், அழுகு சாதனப் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள், நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு மற்றும் காட்டன் புடவைகள்,காட்டன் சுடிதாா் வகைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் 25 வகையான கடைகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இந்தக் கண்காட்சி தினசரி மாலை 4 மணிக்கு இரவு 10 மணி வரை நடைபெறுவதாகவும், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் பாா்வையிட்டு கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.