தஞ்சையில் விஷ வண்டுகள் கடித்ததில் மாணவிகள் உள்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!
விஷ வண்டுகள் கடித்ததில் மாணவிகள் மயக்கம் அடைந்தது பற்றி..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் 13 மாணவிகளுக்கும், இரண்டு பெரியவர்களுக்கும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் மெயின் ரோட்டில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த நிலையில் பள்ளி அருகில் இருந்த மரத்திலிருந்து விஷ வண்டுகள் திடீரென பறந்து வந்து மாணவிகள் மற்றும் அந்த பகுதியில் நடந்து சென்றவர்களை கொட்டியது.
விஷ வண்டுகள் கொட்டியதில் 13 மாணவிகளுக்கும் இரண்டு பெரியவர்களுக்கும் மயக்கம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து 15 நபர்களும் நாச்சியார்கோவில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


