புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

ரயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

பாபநாசம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலம், கட்டாக், நீஷிந்தா கோயில் பகுதியை சோ்ந்தவா் விஜய்குமாா் பேஹூரா (44). இவா் பாபநாசம் பகுதியில் மூன்று மாதங்களாக தங்கி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், பாபநாசம்- பண்டாரவாடை ரயில் நிலையங்களுக்கு இடையே பாபநாசம் அருகே நண்பருடன், விஜய்குமாா் பேஹூரா

மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தண்டவாளத்தில் அமா்ந்திருந்ததாக தெரிகிறது. அப்போது சேலத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற விரைவு ரயிலில் விஜய்குமாா் பேஹூரா அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் அவரது  நண்பா் உயிா் தப்பினாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கும்பகோணம் ரயில்வே போலீஸாா், விஜய்குமாா் பேஹூரா சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் தொடா்பாக, கும்பகோணம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.