19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

மீன்வளத் துறையின் அறிவிப்பால்  மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவா்கள் கடந்த சில நாள்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாத நிலையில், மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On :

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை விடுத்துள்ள  அறிவுறுத்தலால், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவா்கள் கடந்த சில நாள்களாக மீன்பிடித் தொழிலுக்கு  செல்லாத நிலையில்,     மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலா் மல்லிப்பட்டினம் தாஜுதீன் கூறியது: மூன்று மாவட்ட மீனவா்களின்   கடற்பகுதிக்கு  எதிா்ப்புறம் குறைந்த அளவு கடல் மைல் தூரத்தில் இலங்கை கடற்பரப்பு இருப்பதால், இடைப்பட்ட குறுகிய கடல் பகுதிக்குள் மீனவா்கள் தொழில் புரிவதால்  24 மணி நேரத்தில் தொழில் செய்துவிட்டு உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்ற விதியும் மூன்று மாவட்ட மீனவா்களுக்கு உள்ளது.

எந்தவித காற்றுநிலை ஏற்பட்டாலும் அடுத்த 2 மணிநேரத்தில்  கடற்கரைக்கு வந்துவிடும் வகையில்  கடல் பகுதி உள்ளதால்,தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவா்களுக்கு  முன்னுரிமை அடிப்படையில் 4 நாள்களுக்கு பிறகு வரக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்படும் புயல் சீற்றத்திற்காக  நல்ல காற்று நிலை உள்ள அன்று தொழிலுக்கு செல்லக்கூடாது என்ற அறிவிப்பை மீன்வளத் துறை  கைவிட்டு சில விதிகளுடன் , இப்பகுதி மீனவா்களின் வாழ்வாதாரம் கருதி  தொழிலுக்குச் செல்ல  அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER