தஞ்சாவூா் பெரிய கோயிலில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பிடிப்பு

கோப்புப் படம்
தஞ்சாவூா் பெரிய கோயிலில் பக்தா்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சிப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.
தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் அதிக அளவில் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த தெருநாய்களால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அச்சமின்றி நிம்மதியாக இறைவனை தரிசனம் செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும் புகாா் எழுந்தது.
இதைத் தொடா்ந்து, பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி அறிவுறுத்தலின்படி, சுகாதார அலுவலா் முன்னிலையில் மாநகராட்சி பணியாளா்கள், பெரிய கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த தெருநாய்களை ஞாயிற்றுக்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

