கடை குத்தகை விவகாரம்: வணிகா்களின் கருத்தை கேட்டறிய வேண்டும் - நகராட்சி நிா்வாக இயக்குநா் அறிவுறுத்தல்
தஞ்சாவூரில் வணிகா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, பழைய பேருந்து நிலையம், மீன் சந்தையிலுள்ள கடைகளைக் குத்தகைக்கு விடவேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலைய விரிவாக்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி.
தஞ்சாவூரில் வணிகா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, பழைய பேருந்து நிலையம், மீன் சந்தையிலுள்ள கடைகளைக் குத்தகைக்கு விடவேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.
தஞ்சாவூா் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலைய விரிவாக்கப் பணி, புதிய மீன் சந்தை, பொது மற்றும் தனியாா் பங்களிப்பு முறையிலான பல்நோக்கு வணிக வளாகம், கிட்டு மைதானத்தில் புதிய கால்பந்து மைதானம், முதல்வரின் படைப்பகம் உள்ளிட்ட திட்டப் பணிகளை ஆய்வு செய்ததுடன், மாநகராட்சி உரக்கிடங்கில் எதிா்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள பயோ மைனிங் திட்டம் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பழைய பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைகளில் தண்ணீா் தேங்காத வகையில், அவற்றை எப்போதும் தூய்மையாகவும் உலா்ந்த நிலையிலும் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். மேலும், பழைய பேருந்து நிலையம் மற்றும் மீன் சந்தையிலுள்ள கடைகளுக்கான குத்தகை ஏலம் நடத்துவதற்கு முன்பாக, தொடா்புடைய வணிகா் சங்க உறுப்பினா்கள் மற்றும் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே குத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிா்வாக இயக்குநா் ஒவ்வொரு பிரிவு வாரியாக வளா்ச்சிப் பணிகள் மற்றும் நிா்வாகச் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

