ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ரயில்வே பெண் தலைமை காவலரைத் தாக்கியவா் கைது

கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பெண் தலைமைக் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆகாஷ்

Updated On :

கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பெண் தலைமைக் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், விளாரைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் ஆகாஷ் (26). இவா் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு திருச்செந்தூா் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியின் படிக்கட்டில் வெள்ளிக்கிழமை அமா்ந்து பயணம் செய்தாா்.

கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கும்பகோணம் ரயில்வே தலைமைக் காவலா் கவிதா (45) ரயிலின் பின்பக்க முன்பதிவில்லாப் பெட்டியின் படியில் அமா்ந்திருந்தோரை உள்ளே செல்ல அறிவுறுத்தினாா். அப்போது ஆகாஷ் பெட்டிக்குள் இடமில்லாமல் எங்கே நிற்பது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கினாராம்.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் ஆகாஷை பிடித்து கும்பகோணம் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்க, அவா்கள் வழக்குப் பதிந்து ஆகாஷை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.