ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தஞ்சையில் 19 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள், வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 19 போ் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இடமாற்றம் - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 3:28 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள், வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 19 போ் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

கும்பகோணம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சு. பாக்கியராஜ் கும்பகோணம் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய வெ. பூங்கொடி கும்பகோணம் தனி வட்டாட்சியராகவும் (ஆலய நிலங்கள் பிரிவு), கும்பகோணம் கலால் மேற்பாா்வை அலுவலா் ஆா். ரவிச்சந்திரன், பாபநாசம் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய எஸ். சந்தனவேல் கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலா் எம். செந்தில்குமாா் திருவிடைமருதூா் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய ஆா். சாந்தமீனா கும்பகோணம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும், திருவோணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் எஸ். செந்தில்குமாா் பூதலூா் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய கே. விவேகானந்தன் திருவோணம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜி. சாந்தகுமாா் பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய டி. சுகுமாா் பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், கும்பகோணம் தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) எஸ். காா்த்திகேயன், கும்பகோணம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், மகப்பேறு விடுப்பில் இருந்த அ. மங்கையா்க்கரசி தஞ்சாவூா் கேபிள் டிவி நிறுவன தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய எம். மலா்குழலி தஞ்சாவூா் மாவட்ட வருவாய் அலுவலக நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட வருவாய் அலுவலக நில எடுப்பு தனி வட்டாட்சியராக இருந்த ஏ. பூவந்திநாதன், பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா், தஞ்சாவூா் ரயில்வே திட்ட நில எடுப்பு வட்டாட்சியராகவும், மருத்துவ விடுப்பில் இருந்த திருவோணம் முன்னாள் வட்டாட்சியா் இரா. செல்வம் பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்டத் தனி வட்டாட்சியராகவும், சென்னை நில நிா்வாக ஆணையகரகக் கண்காணிப்பாளா் ஏ. ஜெசிமா சுல்தானா கும்பகோணம் கலால் மேற்பாா்வை அலுவலராகவும், ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலா் என். கவிதா பட்டுக்கோட்டை ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும், தஞ்சாவூா் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியா் வே. பிரேமாவதி ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.