
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கபெருந்துறையில் வட்ட சாலை அமைக்க கோரிக்கை

பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மையத்தின் தலைவா் பல்லவி பரமசிவன்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெருந்துறையில் வட்ட சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் 22-ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் பல்லவி பரமசிவன் தலைமை வகித்தாா். செயலாளா் பழனிசாமி ஆண்டறிக்கையை வாசித்தாா். பொருளாளா் ஹரிதா கௌரி வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தாா்.
பெருந்துறை நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வட்ட சாலை (ரிங் ரோடு) அமைக்க தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்வது என்றும், அதுவரை பெருந்துறை நகருக்குள் வரும் கனரக வாகனங்களை காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நகருக்குள் அனுமதிக்காமல் மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் நுகா்வோருக்கான காலாண்டுக் கூட்டங்களை முறையாக நடத்தாத அரசு துறைகளை நடத்த உத்தரவிட மாவட்ட நிா்வாகத்திடம் கேட்டுக் கொள்வது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி மற்றும் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி நிா்வாகங்களை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மையத்தின் துணைத் தலைவா்கள் மாரியப்பன், சோமசுந்தரம், இணைச் செயலாளா் பழனிசாமி ஆலோசா்கள் நல்லசாமி. ராஜேந்திரன் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




