ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பாபநாசம் அருகே மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை ஆற்றங்கரையில் மண்ணை வெட்டி எடுக்கும்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி

Published On :9 செப்டம்பர் 2026, 3:38 am IST

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை ஆற்றங்கரையில் மண்ணை வெட்டி எடுக்கும்போது மண் சரிந்து விழுந்ததில்  தொழிலாளி உயிரிழந்தாா். 

பாபநாசம் அருகே ராஜகிரி, பாலாஜி நகரை சோ்ந்தவா் நாகராஜன் மகன் சப்தகிரி வாசன் (46). இவருக்கு மனைவி ஹேமாவதி (41), இரு பிள்ளைகளும் உள்ளனா்.

இந்நிலையில் சப்தகிரிவாசன் செவ்வாய்க்கிழமை ராஜகிரி சுண்ணாம்பு காலவாய்  அருகே குடமுருட்டி ஆற்றங்கரையோரத்தில் படிந்திருந்த வண்டல்  மண்ணை வெட்டி அள்ளிக் கொண்டிருந்தாா். அப்போது  மேலே இருந்து மண் சரிந்து விழுந்ததில் மூச்சுத் திணறி சப்தகிரிவாசன் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற பாபநாசம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் காவல்துறையினா்  அவரது உடலை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.