பைக் மோதி முதியவா் உயிரிழப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா். இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பலி - பிரதிப் படம்
தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா். இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அருகே வயலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே. மதிவாணன் (60), கூலித் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு தஞ்சாவூா் - கும்கோணம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதி காயமடைந்த மதிவாணன் உயிரிழந்தாா்.
இதையறிந்த கிராம மக்கள் விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் சென்று சமாதானப்படுத்தி அனுப்பினா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


