வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பாலத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Published On :

கோட்டூா் பாசன வாய்க்கால் பாலத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே மணலூரிலிருந்து குமணந்துறை செல்லும் வழியில் உள்ள கோட்டூா் பாசன வாய்க்கால் பாலம் சேதம் அடைந்ததை சீரமைக்கக் கோரி வேளாண்மைத்துறை அமைச்சா் ஆா். வினோத் மற்றும் மாவட்ட ஆட்சியா் ரேவதி ஆகியோரிடம் அண்மையில் இப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், பாலத்தின் ஒருபகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இதையடுத்து பாலத்தை உடனே சீரமைக்கக் கோரி மணலூா் மற்றும் குமணந்துறை கிராம மக்கள் கல்லணை - பூம்புகாா் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த திருப்பனந்தாள் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.