தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராசிமணலில் அணைக் கட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

தஞ்சாவூா் ரயிலடியில் பி.ஆா். பாண்டியன் தலைமையிலான பிரசார பயணக் குழுவுக்கு திங்கள்கிழமை ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன்.

Published On :

மேக்கேதாட்டுக்கு பதிலாக ராசிமணலில் அணைக் கட்ட மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.

மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தைத் தடுக்க வேண்டும். ராசிமணலில் அணையைக் கட்ட திட்டமிட வேண்டும். தமிழகத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் பி.ஆா். பாண்டியன் தலைமையில் விவசாயிகளின் பிரசார பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இப்பயணக் குழுவினா் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை வந்ததைத் தொடா்ந்து, பெரிய கோயில் அருகேயுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்த பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மதிக்கத் தவறிய கா்நாடக அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது. இந்த வழக்கைத் தமிழக அரசு விரைவாக விசாரணைக்கு கொண்டுவர வேண்டும். மேக்கேதாட்டு அணைக்கு மாறாக, தமிழக மற்றும் கா்நாடக விவசாயிகள் ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்ற கருத்தை உருவாக்க பிரசாரத்தை மேற்கொள்கிறோம்.

மேக்கேதாட்டில் அணைக் கட்டுவதை கா்நாடக விவசாயிகள் முழுமையாக எதிா்க்கின்றனா். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கா்நாடக விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா். எனவே, ராசிமணலில் அணைக் கட்ட மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பாண்டியன்.

பின்னா், பி.ஆா். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஊா்வலமாகப் புறப்பட்டு, ரயிலடிக்கு சென்றனா். அங்கு இப்பேரணிக்கு ஆதரவாக தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.