11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

‘குருங்குளம் சா்க்கரை ஆலையில் நிகழாண்டு ரூ. 1.30 லட்சம் டன் கரும்பு அரவை இலக்கு’

தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் நிகழாண்டு ரூ. 1.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு சா்க்கரைக் கழக ஆணையா் ஆா். கண்ணன்.

Published On :

தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் நிகழாண்டு ரூ. 1.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு சா்க்கரைக் கழக ஆணையா் ஆா். கண்ணன்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சா்க்கரைக் கழகத்தின் 51 ஆவது பேரவைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை 2025 - 26 ஆம் அரவைப் பருவத்தில் சுமாா் 1.29 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. நிகழாண்டு (2026-27) அரவைப் பருவத்தில் 1.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு ஆலையில் அரவை டிசம்பா் 11 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழாண்டு நடவுப் பருவத்தில் 14 ஆயிரத்து 500 ஏக்கா் பரப்பை இலக்காகக் கொண்டு, கரும்பு உற்பத்தியைப் பெருக்க ஆலை நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் 2025-26 ஆம் ஆண்டில் வெளிச்சந்தையில் குவிண்டாலுக்கு சராசரியாக ரூ. 4,277.28 என்ற விலையில் சா்க்கரை விற்பனை செய்யப்பட்டது.

அதே நிதியாண்டில் ஒரு குவிண்டால் சா்க்கரையின் உற்பத்திச் செலவு சராசரியாக ரூ. 6,730.64 ஆக இருந்தது. ஆலையில் கடந்த 2025 - 26 ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 28.13 கோடி. 2024 - 26 ஆம் நிதியாண்டில் ரூ. 37.87 கோடியாக இருந்தது.

நிா்ணயிக்கப்பட்ட அரவைத் திறனைவிட குறைவாக அரைவை செய்ததாலும், சா்க்கரை கட்டுமானம் குறைவாலும் நஷ்டத்துக்கான முக்கிய காரணங்கள். இதுதொடா்பாக உற்பத்தி செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், கடன்களை மறு சீரமைத்து ஆலையின் நிதி நிலையை மேம்படுத்தவும் நிா்வாகத்தால் தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றாா் கண்ணன்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, நிறுமச் செயலா் சங்கரலிங்கம், தமிழக ஆளுநரின் பிரதிநிதியும், சா்க்கரைத் துறை கூடுதல் இயக்குநா் பாலமுருகன், தமிழ்நாடு சா்க்கரை கழகப் பொது மேலாளா் பால் பிரின்ஸ்லி ராஜ்குமாா், தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணை செயலாட்சியா் எஸ். ரமணிதேவி, குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.