தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

திருச்சி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணை  அரிவாளால் வெட்டி 4 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :

திருச்சி திருவெறும்பூர் அருகே அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணை  அரிவாளால் வெட்டி 4 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (எ) பெருமாள் மனைவி ஆர்த்தி (25). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆர்த்தி, தனியே திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள பாலாஜி நகர் 5-வது தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற பெல் ஊழியர் தனபால் என்பவரது வீட்டின் கீழ் தளத்தில் குடியிருந்து வருகிறார்.

மேலும், அந்த பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

சனிக்கிழமை பிற்பகல் ஆர்த்தியின் அலறலை  கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஆர்த்தி அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார்.

மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி சிதறி கிடந்துள்ளது.

இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஆர்த்தியை திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் துவாக்குடி, வ.உ.சி. நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆர்த்தி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும், அவர்தான் ஆர்த்தியை அரிவாளால் வெட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகை, வீட்டிலிருந்த வெள்ளிப் பொருள்களை திருடிக் கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்றதும் தெரியவந்தது. போலீஸார் அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.