ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆதார் எண் இணைப்பு: பிஎஸ்என்எல் சார்பில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் திருச்சி மண்டலத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:22 pm

DIN

பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் திருச்சி மண்டலத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.
 இதுதொடர்பாக, திருச்சி மண்டல பிஎஸ்என்எல் முதன்மைப் பொதுமேலாளர் வி.ராஜு கூறியது:
மத்திய அரசின் உத்தரவுப்படி, செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயம். எனவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் டிச.29, 30-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களை அணுகி தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். திருச்சி நகரில் முதன்மைப் பொதுமேலாளர் அலுவலகம், மெயின்கார்டு கேட் இணைப்பகம், ஸ்ரீரங்கம் இணைப்பகம் ஆகிய இடங்களில் உள்ள சேவை மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.