கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொடக்க வேளாண் வங்கியில் ரூ. 40.46 லட்சம் மோசடி: வங்கிச் செயலாளர் உள்பட 2 பேர் கைது

திருச்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாய நகைக்கடன் கணக்கில் ரூ. 40.46 லட்சம் மோசடி செய்ததாக வங்கிச் செயலாளர் உள்பட

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:23 pm

DIN

திருச்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாய நகைக்கடன் கணக்கில் ரூ. 40.46 லட்சம் மோசடி செய்ததாக வங்கிச் செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், எட்டரை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில்  கடந்த 2013-16 இடைப்பட்ட நிதியாண்டுகளில், அப்பகுதியைச் சேர்ந்த  42 பேர், மொத்தம் ரூ. 40,46,361-க்கு நகை அடமானத்தின் பேரில் வேளாண் கடன் பெற்றிருந்தனர்.  பின்னர், கடன் பெற்றவர்கள் கடன் தொகையைச் செலுத்தி நகைகளை மீட்டுள்ளனர். ஆனால், வங்கிக் கணக்குகளை தணிக்கை (ஆடிட்) செய்தபோது, கடன் தொகை செலுத்தப்படவில்லை என பதிவாகியிருந்தது தெரியவந்தது.
 இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரூ. 40,46,361-ஐ, அப்போதைய வங்கிச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து  மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கி துணைப்பதிவாளர் பாலசந்திரன், திருச்சி வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், ஆய்வாளர் உமா, போலீஸார் 13 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். 
 விசாரணையைத் தொடர்ந்து வங்கிச் செயலாளர் குளித்தலையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (52), கூட்டுறவுத்துறை நியாயவிலைக் கடையில் பணியாற்றும் ரஞ்சன் (45) ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து  வங்கி உறுப்பினர்கள் 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.