பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

அரசியலற்ற போராட்டத்துக்கு வணிகர் சங்க பேரவை ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நடைபெறும்  அரசியலற்ற போராட்டங்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும்  என்றார்  தலைவர் வெள்ளையன்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:41 am

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நடைபெறும்  அரசியலற்ற போராட்டங்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும்  என்றார்  தலைவர் வெள்ளையன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை  மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  காவிரி பிரச்னை, நியூட்ரினோ, மீத்தேன், ஸ்டெர்லைட் என  தமிழக மக்கள் ஏற்க மறுக்கும் திட்டங்களால் மத்திய அரசு   தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இந்த நச்சுத் திட்டங்களை அடித்து விரட்டும் வரையில் தமிழக மக்கள் ஓயக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும். அரசியல் கலப்பற்ற போராட்டங்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும். காஞ்சிபுரத்தில் மே 5ஆம்தேதி  நடைபெறவுள்ள 35வது வணிகர் தின மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கலந்து கொண்டு பேசுகிறார். மாநாட்டில் சில்லறை வணிகர்கள் நலன் காப்பதற்கான திட்டங்கள், ஆன்லைன் வணிகத்துக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.