மணப்பாறை அருகே தூய தோமையார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள தூய தோமையார் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை (ஏப்.5) தூய தோமையார் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சியும், சனிக்கிழமை (ஏப்.7) உயிர்த்த ஆண்டவர் தூய தோமையார் சந்திப்பு, தேர் பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, தூய தோமையார் ஆலயத்தில் பங்குத் தந்தை அம்புரோஸின் சிறப்பு திருப்பலிக்கு பின் பெரிய தேர் ஊர்வலம் புறப்பட்டது. திரளான கிறிஸ்தவர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த தேர் மீது, பொட்டுக்கடலை தூவி பொதுமக்கள் அளித்த வரவேற்புக்கு பிறகு தேரடிக்கு வந்தது.
மலையடிப்பட்டி பங்கு சார்ந்த மலைதாதம்பட்டி, ராயம்பட்டி, புதுப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, பிச்சமணியாரம்பட்டி, தெற்கு அஞ்சல்காரன்பட்டி உள்ளிட்ட 18 கிராம மக்கள் கலந்து காண்டனர்.
தேரோட்டத்தைத் தொடர்ந்து, தூய தோமையார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, பிராத்தனைகள் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்கமாட்டோம்: சீனா

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

