காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி அருகே புலியூரில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள், விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பெண்கள் ஒப்பாரி வைத்துபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் வட்டம், புலியூரிலுள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடியுடன் கிராம பொதுமக்கள், விவசாயிகள் தாரை தப்படையுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் அ. நாகராஜன் தலைமை வகித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வந்த பெண்கள் வாய்க்காலில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கண்ணீர்மல்க முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றியத் துணைத் தலைவர் சங்கப்பிள்ளை, முதலைப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர்கள் மகாமுனி, மணிகண்டன், புலியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சங்கர், திமுக நிர்வாகி நெடுமாறன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

