மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

காவிரி பிரச்னை: இருசக்கர வாகனத்தில் கிறிஸ்தவர்கள் பேரணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  திருச்சியிலிருந்து கல்லணை வரை கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனப் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:41 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  திருச்சியிலிருந்து கல்லணை வரை கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனப் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.
திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னைப் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை  திருப்பலி- ஆராதனை முடிந்த பின்னர்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும் அதற்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி  இரு சக்கர வாகனப் பேரணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பேராலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா, தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு ஆகியோர் கொடியசைத்து  பேரணியைத் தொடக்கி வைத்தனர்.
தொடக்க நிகழ்வில் பேராலயப் பங்குத்தந்தை ஜோ.ஜோ. லாரன்ஸ் , அருள்தந்தைகள் சேவியர் ஜெரால்டு, மைக்கேல் ஜோ, சார்லஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதைத் தொடர்ந்து ஏராளமானோர்  இரு சக்கர வாகனங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,  விவசாயத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தும்  அட்டைகளை ஏந்தியவாறு பேரணியில் சென்றனர்.
மேலப்புதூரில் தொடங்கிய பேரணி குட்ஷெட் ரயில்வே பாலம், டிவிஎஸ் டோல்கேட்,  செந்தண்ணீர்புரம், பால்பண்ணை, தஞ்சாவூர் சாலை, காட்டூர், அரியமங்கலம், வேங்கூர் வழியாக கல்லணையில் நிறைவடைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.