வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

தொட்டியம் ஒன்றியத்தில்  சமூக சுகாதார நிலையத்துக்கு  மருத்துவ உதவி சாதனங்கள் வாங்க நிதி

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் 36 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு  சமூக சுகாதார நிலையம் அமைத்திட மருத்துவ உதவி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:57 am IST

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் 36 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு  சமூக சுகாதார நிலையம் அமைத்திட மருத்துவ உதவி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதியோர்களுக்கான ஆரோக்கியம் சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமூக சுகாதார நிலையம் அமைத்திடும் வகையில்,  கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் வங்கிக் கணக்கில் மருத்துவ உதவி சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்க தலா ரூ.30,000 வீதம் 26 சங்கங்களுக்கு  நிதியை ஆட்சியர் கு.ராசாமணி திங்கள்கிழமை வழங்கினர்.  
அரசு ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் இல்லாத, மருத்துவ வசதியற்ற குடியிருப்புகளில்  இந்த  சுகாதார நிலையம் அமைக்கப்படும். 
குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் வேலை நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சமூக சுகாதார நிலையம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.