திருவானைக்காவில் 63 நாயன்மார் திருவீதி உலா
திருவானைக்கா பன்னிரு திருமுறை வார வழிபாட்டுக் கழகம் சார்பில் 49 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 63 நாயன்மார்களின்


திருவானைக்கா பன்னிரு திருமுறை வார வழிபாட்டுக் கழகம் சார்பில் 49 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 63 நாயன்மார்களின் நான்காம் பிரகாரத்தைச் சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகம் சார்பில் 63 நாயன்மார்களின் விழா சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று காலை ஆத்மார்த்த சிவபூஜை, பின்னர் சொற்பொழிவுசி நடைபெற்றது. 2 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை வாழ்த்துரை, முகவுரை நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் இரவு 7 மணிக்கு திருக்கயிலாய பரம்பரை திருவாடு துறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகப் பரம்மாச்சாரிய சுவாமிகள் 63 நாயன்மார்களின்
திருவீதி உலாவை தொடங்கி வைத்தார்.
அலங்கரிங்கப்பட்ட ரதத்தில் 63 நாயன்மார்கள் நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான சிவபக்தர்கள் பங்கேற்று சிவபுராணம் பாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...