இன்றைய மாணவர்கள் உயர்கல்வியில் எந்தத் துறையை தேர்வு செய்தாலும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அமெரிக்க பேராசிரியர் சத்யநாராயண பராய்தம்.
திருச்சி தேசியக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வணிகம், மேலாண்மைத் துறையில் நிகழ்கால சூழல் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
வணிகம் மற்றும் மேலாண்மைத் துறை என்பது வளரும் நாடுகளுக்கு அவசியமாகவுள்ளது. மேலாண்மை அறிவியல் பாடமாக படித்திருந்தாலும், உள்ளார்ந்த மேலாண்மைத் திறன் இல்லை என்றால் சிறந்த மேலாண்மையாளராக இருக்க முடியாது. மேலாண்மை அறிவியலில் உள்ள கோட்பாடுகளை வியாபார உலகின் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. பிரச்னை ஏற்படும்போது அந்த பிரச்னையின் சூழலை அதிகம் கவனிக்க வேண்டும்.
தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டுமெனில் அங்குள்ள மேலாண்மையாளர் தன் அனுபவ அறிவை அதிகம் பயன்படுத்த வேண்டும். எனவே, வணிகம் மற்றும் மேலாண்மை பாடங்களை தேர்வு செய்துள்ள மாணவர்கள் தங்களது தனித்திறமை, அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதுடன் தொழில்நுட்பத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்றார் சத்யநாராயண பராய்தம்.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஆர். சுந்தரராமன் தலைமை வகித்தார். வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை தலைவர் எஸ்.ஞானசேகரன் வரவேற்றார்.
பேராசிரியர்கள் சேகர், குமார், சௌந்தர்யா ஆகியோர் கருத்தரங்கத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு! ஜூலை 17 நிலவரம்!!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்வு

3,000 திரைகளில் வெளியாகும் ஜன நாயகன்!
இந்தியாவில் வெளியானது கிறிஸ்டோஃபர் நோலனின் ’தி ஒடிசி’!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


