
திருச்சி சின்னசூரியூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் 2018-20 ஆம் ஆண்டுக்கான முதுகலை வணிக மேலாண்மைப் படிப்புகள் ( ஏழாவது பிரிவு) தொடக்கம், விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருச்சி ஐ.ஐ.எம். இயக்குநர் முனைவர் பிம்மராய மேத்ரி தலைமை வகித்தார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ். என்.பாண்டே, 2016-18, 2017-19ஆம் கல்வியாண்டுக்கான சிறந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கியும், 2015-18ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த தொழிலகத் திட்டத்துக்கான விருது வழங்கிப் பேசினார்.
முதுகலை வணிக மேலாண்மைப் படிப்புப் பிரிவுத் தலைவர் கார்த்திக் தண்டபாணி, முன்னாள் மாணவரும், டிரான்ஸ்பிஜ் கன்சல்டிங் நிறுவனத்தின் இயக்குநருமான பி.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், அகாதெமி செயலர் ஜெய்ஷ் ஜெய்கர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






