மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும்: வங்கி அதிகாரிகள் மாநாட்டில் கோரிக்கை

பதினோராவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய

Updated On :9 ஜூலை 2018, 2:47 am

பதினோராவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க 8 ஆவது மாநில மாநாட்டில் கோரிக்கை விடுத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு சங்கத் தலைவர் கே.  பாஸ்கரன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் எஸ். நாகராஜன்,   தமிழ்நாடு பொதுச் செயலர் டி.எஸ். கணேசன்,  திருச்சி மாவட்டத் தலைவர் ஆர்.டி. ராமமூர்த்தி,  ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலர் வேலாயுதம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் அருணாச்சலம்,  திருச்சி மாவட்ட வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் நீலகண்டசர்மா,  திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலர் ராமராஜ், இந்திய வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் வி. சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொதுத்துறை வங்கிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதிகாரிகளின் பணி நேரம் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். பதினோராவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும்.  பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.