லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றார் திருச்சி மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன்.
திருச்சியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கைக்கான கூர்ந்தாய்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு இயந்திரவியல் பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், கணினிப் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் ரூ.150 செலுத்தி விண்ணப்பங்களை பெறலாம்.
அஞ்சல் மூலமாக பெற முதல்வர், லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி என்ற பெயரில் ரூ.180-க்கு கோடிட்ட வங்கி கேட்பு வரைவோலையை முதல்வர், லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி, அய்யன்வாய்க்கால் சாலை, ஆங்கரை, லால்குடி என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
அரசாணைப்படி இன , இட ஒதுக்கீடு ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும். தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு, இரண்டமாண்டு மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறுகிறது என்றார் இணைப் பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன். இக்கல்லூரியில் 2017-18 ஆம் ஆண்டில் பட்டயப்படிப்பை முடித்துச் சென்ற மாணவ, மாணவிகளில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 36 பேருக்கு தேர்வுச் சான்றிதழ்களையும் இணைப் பதிவாளர் வழங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் துணைப் பதிவாளர் சி. இளங்கோவன், உதவி இயக்குநர் குணசேகரன், லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம். சின்னச்சாமி, துணைப் பதிவாளர்கள் க. சித்ரா, கே. பரமசிவம், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் வ. குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









