தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் வாழைப்பழம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த அணியின் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசுப் பள்ளிகளில் சத்துணவில் முட்டை சாப்பிட விரும்பாதவர்களுக்கு மட்டும் வாழைப்பழம் வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்படும் வாழைப்பழம் ஒன்றின் விலையை ரூ.1.25-க்கு பதிலாக ரூ.3. 50 ஆக உயர்த்தவுள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்புக்குரியது.
ஆனால், சில மாற்றங்களை அமல்படுத்த வேண்டியது அவசியம். இந்தியாவிலேயே தமிழத்தில் மட்டும்தான் அதிகளவு வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், வாழைப்பழத்துக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு கொள்முதல் செய்யும் வாழைப்பழத்துக்கு ஒன்றுக்கு ரூ.5 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், சத்துணவில் தினந்தோறும் வாழைப்பழம் வழங்க வேண்டும். இல்லையெனில் ஒரு நாள் முட்டையும், அடுத்த நாள் வாழைப்பழம் என வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








