இளையோர் நினைத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார் திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி.
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் 48-ஆவது கல்லூரி தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவர் மேலும் பேசியது:
கல்வி கற்பதற்கான சிறந்த தளமாக திருச்சி நீண்ட காலமாக விளங்கி வருகிறது. இங்கு கல்வி கற்றவர்கள் மிகப்பெரிய பதவிகளில் வகித்துள்ளனர். நேர்வழியில் பெறும் வெற்றியே நிலைத்திருக்கும். கடமையைச் சரியாக செய்யும் நபர்களுக்கு மட்டுமே உரிமையைப் பற்றி பேசும் அதிகாரமுண்டு. படிப்பு முடிந்தபின் விருப்பமான துறையில் பணியை தேர்வு செய்வது மிக முக்கியம். உங்களைப்போன்ற இளையோர் நினைத்தால் எத்தகு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் பத்மா ராமகிருஷ்ணன், முதல்வர் ஈ. கிறிஸ்டி செல்வராணி, முனைவர்கள் சிவக்குமார், வீரமணி, இந்திராகுமாரி, பிரதீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றியோருக்கு விருது மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் கால பெளத்த, துவாரபாலகா் சிற்பங்கள் கண்டெடுப்பு

பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு

திருநாவலூா் பக்தஜனேசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

