கடந்த காலங்களைவிட தற்போது உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
திருச்சி சாத்தனூர், அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 15 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 214 பேருக்கு பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது: நாடு முழுவதும் சுமார் 800 பல்கலைக்கழகங்கள், 40,000 கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை கடந்தாண்டுகளை விட 45 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகளிர் 50 சதவிகிதம் பேர் உள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் - மாணவர்களின் விகிதாச்சாரம் 1-க்கு 30 என்ற அளவில் உள்ளது. இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பு இந்தியாவில் உள்ளது. இதில், சுமார் 3 முதல் 4 கோடி இளைஞர்கள் பயின்று வருகின்றனர் என்பது நமக்கு பெருமை. கல்வி கற்பது மட்டுமே மாணவ, மாணவியருக்கு மேன்மை தராது, எந்த செயலையும் அறிவுப்பூர்வமாக செயல்படுத்துவது அவசியம்.
இஸ்லாத்தில் கல்வியின் பெருமை சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோலவே இந்து மதம் மட்டுமின்றி கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் நூல்களுமே கடவுள் வழிபாடு, இறைவனுக்கு பணிதல், கல்வி உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கின்றன என்றார் அவர்.
நிகழ்வில், கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஜெய்லானி சம்சுதீன், துணைத்தலைவர் எச். ஹசன் அகமது, செயலாளர் எம். ஒய். ஹபிபுல்லா, பொருளாளர் கே.எம்.ஐ. அகமதுகுத்புதீன்ராஜா, தாளாளர் எம்.எம். ஷாகுல் ஹமீது, முதல்வர் வி. சுபத்ரா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
பட்டம் பெற்றவர்கள் : இளங்கலை பிரிவில் 231, முதுகலை பிரிவில் 16 என மொத்தம் 247 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், இளங்கலையில் 9, முதுகலையில் 2 என 11 மாணவியர் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

