குறைதீர்க்கும் கூட்டத்தில் 53 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 53 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 52 ஆ


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 53 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் திங்கள்கிழமை ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு சக்கர நாற்காலி, 11 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டன. வரகுடி அங்கன்வாடி மையத்தில் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்த பூங்கோதை என்பவரது வாரிசுதாரரும், மகனுமான மணிகண்டனுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இவைத் தவிர சமூகப் பாதுகாப்பு திட்டம், முதியோர் உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகை என பல்வேறு நிலைகளில் 53 பயனாளிகளுக்கு ரூ.4.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய 407 மனுக்கள் பெறப்பட்டு உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் அ.பஷீர், தனித்துணை ஆட்சியர் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...