கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு

ஆர்.எஸ்.எஸ். சார்பில் திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் 250- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

News image
Updated On :14 மே 2018, 10:27 pm

DIN

ஆர்.எஸ்.எஸ். சார்பில் திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் 250- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உலகிற்கு வழிகாட்ட நல்ல மனிதர்களை உருவாக்கிட நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ். எஸ். சார்பில் பண்புப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தென் தமிழகத்துக்கான முகாம் திருச்சியில் ஜெயேந்திரா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 நாள்களாக நடைபெற்றது.
இந்த முகாமில் யோகா, கராத்தே, சிலம்பம், ஜாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கும் விளையாட்டுகள், மன உறுதி, கட்டுப்பாட்டுக்கான பயிற்சிகள், தேசப்பக்தி பாடல்கள், தேசியம் மற்றும் தெய்வீகம் பற்றிய சொற்பொழிவுகள், தனி மனித ஒழுக்கத்துக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 250-க்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.
பண்புப் பயிற்சி முகாம் நிறைவையொட்டி ஆர்.எஸ்.எஸ்-ன் அணிவகுப்பு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி சந்தானம் வித்யாலயாவில் தொடங்கிய அணிவகுப்பு கீழரண்சாலை, கீழ ஆண்டார்வீதி, வடக்கு ஆண்டார்வீதி, பட்டர்வொர்த் சாலை, கீழரண்சாலை, பாரதியார் சாலை வழியாக ஜெயேந்திரா மெட்ரிகுலேசன் பள்ளியில் நிறைவடைந்தது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீரூடை அணிந்து வாத்திய இசையுடன் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு அம்மன் டிஆர்ஒய் இரும்புக்கம்பிகள் நிறுவனத்தின் தலைவர் எம். சோமசுந்தரம் தலைமை வகித்தார். மருத்துவர் ஆனந்த் ரங்கசாமி முன்னிலை வகித்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத காரிய காரி பிரிவைச் சேர்ந்த குருகோத்ரி சிங், தட்சிண தமிழ்நாடு அமைப்பின் பரமேசுவரன், பிராந்திய சேவா பிரமுக் ஸ்ரீ கணேசன், கிஷான் விகாஸ் பிரசன்னன், நிர்வாகிகள் செல்லத்துரை, செந்தில்குமார், முத்துக்கிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம். சுப்ரமணியம், மாவட்டத் தலைவர்கள் திருச்சி மாநகர் தங்க ராஜய்யன், புறநகர் மனோகர்ராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர் பார்த்திபன், விழா வரவேற்புக் குழுத் தலைவர் கே. மது உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.