பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று முத்தரையர் எழுச்சிச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறியில் ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொன்.காமராஜர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முத்தரையர் உள்பிரிவு சாதிப் பெயர்களை இணைத்து திருத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சாதிப் பட்டியலை வெளியிட வேண்டும். முத்தரையர் சாதியின் 11 உள்பிரிவு சாதிகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பெரும்பிடுகு முத்தரையர் என்றழைக்கப்பட்ட சுவரன் மாறனை நினைவுக்கூரும் வகையில் அவருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கௌரவத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பா. மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக க.மஞ்சு வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ஆர். கமுகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

