மணப்பாறை : வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வேடபரி
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் வேடபரி திங்கள்கிழமை நடைபெற்றது.


மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் வேடபரி திங்கள்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் உள்ள ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை கோயில் முன்பு பொங்கல் வைத்தும், மாவிளக்கு, கிடா வெட்டுதல், அக்னிச் சட்டி, அலகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அதைதொடர்ந்து, மாலையில் காட்டு முனியப்பன் கோயிலில் படுகளத்துக்காக குதிரை வாகனத்தில் கையில் அம்புடன் இருந்த வேப்பிலை மாரியம்மன் பல்லக்கை தூக்கி திருவீதியுலா வரும் வேடபரி நடைபெற்றது. இதன்பின், ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரிகளை ஏந்தி வந்தனர்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் வே.பிரபாகர், பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ்.வீரமணி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...