மொழியின் முக்கியத்துவத்தை இன்றைய மாணவர்கள் உணர வேண்டும் என்றார் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கல்வியாளர் சங்கமம் சார்பில் திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், சாதனை ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி, மேலும் அவர் பேசியது: இளைஞர்களை உத்வேகப்படுத்தி நல்ல சமூகத்தை அமைக்க ஆசிரியர்களால்தான் முடியும். தியாகிகளையோ, ஆசிரியர்களையோ முன்னாள் தியாகிகள், முன்னாள் ஆசிரியர்கள் என்று கூறுவது கிடையாது. ஆசிரியர்கள், தியாகிகள் என்றேதான் வாழ்நாள் முழுவதும் கூறுகிறோம்.
மொழிஎன்பது எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைக்கு ஒவ்வொரு மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய அளவில் இந்தி தெரிந்திருக்க வேண்டும், உலகளவில் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், தமிழகத்தில் தாய்மொழி தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், நாம் மட்டும் ஏன் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும். உலகளவில் பொதுமொழியாக உள்ள ஆங்கிலத்தை மட்டும் படித்தால் போதாதா, ஏன் இந்தி படிக்க வேண்டும். இனிக்கின்ற தமிழை இனிக்க வைக்க வேண்டும். எனவே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தமிழ்ப் பற்றை சொல்லித் தர வேண்டும் என்றார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. முன்னதாக, ஆசிரியர்களுடன் அன்னையர் தின விழாவை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொண்டாடினார். இந்த விழாவில், கல்வியாளர் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி. சதீஷ்குமார் , மாஸ்டர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஏ. மாலுக் முகமது, புதுக்கோட்டை நகர்நல அலுவலர் மருத்துவர் யாழினி ஆகியோர் பேசினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

