சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மானியத்தில் சிறு பால்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் அரசின் மானிய உதவியுடன் சிறு பால்பண்ணை அமைக்க விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On :21 மே 2018, 9:00 pm

திருச்சி மாவட்டத்தில் அரசின் மானிய உதவியுடன் சிறு பால்பண்ணை அமைக்க விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் சிறு பால்பண்ணை நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓர் அலகுக்கு ஆகும் மொத்தச் செலவான ரூ. 5 லட்சத்தில் அரசு மானியமாக ரூ. 1.25 லட்சம் அளிக்கப்படும். மாவட்டத்தில் 3 அலகுகள் சிறு பால்பண்ணை அமைக்க மானியம் பெறப்பட்டுள்ளது. திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் கால்நடைகளுக்கான கொட்டகை அமைக்க 300 சதுர அடி நிலமும், தீவனப்பயிர் பயிரிட நீர்ப்பாசன வசதியுடன் ஒரு ஏக்கர் நிலமும் வைத்திருக்க வேண்டும்.
கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் பிற திட்டங்களில் பயன்பெறாத பயனாளியாக இருக்க வேண்டும். கறவை மாடுகள் ஏதும் வைத்திருக்காதவராக இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியராகவோ அல்லது அவர்களின் வாரிசாகவோ இருக்கக் கூடாது.
கிராம ஊராட்சியில் நிரந்தரக் குடியிருப்பில் உள்ளவராக இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட பட்டியலே இறுதியானது. 2 புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்பத்தை அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் வழங்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம். விண்ணப்பங்களை இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.