திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் மற்றும் துவாக்குடி நகராட்சிப் பகுதிகளில் வீடில்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், ஆட்சியர் கு.ராசாமணியிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் அயிலை சிவசூரியன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள்
அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது: திருவெறும்பூர் வட்டம், வாழவந்தான்கோட்டை ஊராட்சியிலுள்ள பொன்னகர், அய்யம்பட்டி, ( அந்தோனியார்கோயில் தெரு), பகுதிகள், துவாக்குடி நகராட்சிப் பகுதிகள், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியிலுள்ள எழில்நகர், குமரேசபுரம், கிருஷ்ணசமுத்திரம் கிராமப் பகுதிகளில் பல குடும்பங்கள் சொந்தமாக வீடில்லாமல் பல ஏழை மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆறு எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆறுக்கும் இந்த இடத்தும் தொடர்பில்லாமல் திடலாக இருப்பதால் இந்த இடத்தை பொதுமக்களுக்கு வீட்டுமனைகளைப் பிரித்து வழங்க வேண்டும்.
தார்ச்சாலையாக மாற்ற கோரிக்கை: அரசங்குடி ஊராட்சியிலுள்ள தொண்டைமான்பட்டி பூசாரித் தெருவில் 40 ஆண்டுகளாக 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இத்தெருவிலிருந்து திருவெறும்பூர்- பத்தாளப்பேட்டை சாலைக்கு செல்ல அரை கி.மீ. தொலைவு ஆகும். வாகனங்களில் செல்ல வேண்டுமெனில் 3 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, அரை கி.மீ. தொலைவு உள்ள வரப்புப் பாதையை அகலப்படுத்தி தார்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
ஆலையை மூடக் கோரிக்கை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
பொதுமக்களுக்கு பெரும் சுகாதாரக் கேடை ஏற்படுத்தும் வகையிலும், நோய்களை உருவாக்கும் வகையிலும் செயல்பட்டு வந்த தனியார் கருக்காய் ஆலையை மூட உத்தரவிடப்பட்டும், ஆலையை மூடாமல் மீண்டும் முறைகேடாக இயங்கி வருவதாகத் தெரிகிறது. எனவே மக்கள் நலன் கருதி இந்த ஆலை தொடர்ந்து இயங்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மண்ணச்சநல்லூர் வட்டம், பூனாம்பாளையம் ஊராட்சியிலுள்ள அரசப்படி பகுதி மக்கள் அளித்த மனு: பூனாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அரசப்படி பகுதியில் 300 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இந்நிலையில் அரசப்படியிலிருந்து ராசாம்பாளையம் செல்லும் குசவன்குட்டை சாலை மிகவும் மோசமாக உள்ளது.
இந்த சாலையில் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, 2 கி.மீ. தொலைவு உடைய மண்சாலையைத் தார்ச்சாலையாக மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி, விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

