கல்விக்கடனைத் திரும்பச் செலுத்துவதில் கேரளத்தைப் போல புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என அனைத்திந்தியப் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் திருச்சி ப. மாணிக்கம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டச் செயலர் ஜி.ஆர். தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
மாணவ, மாணவிகள் வாங்கும் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துகையில், மாணவர்களோடு அரசும் சரிபாதி பங்களிப்பைச் செலுத்தும் வகையிலான கேரள அரசின் புதிய கல்வித் திட்டத்தைப்போல் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும். மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை, கல்விக் கடனை திருப்பி செலுத்த வங்கிகள் நிர்பந்திக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிக்கவேண்டும், தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூலைத் தடுக்க வேண்டும், கல்வியை முழுமையாக தனியார்மயமாக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளின் 60 பல்கலைக்கழகங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் ஜூன் 20 ல் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

