ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

"மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊழலை ஒழிக்க வேண்டும்'

மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார் மத்திய புலனாய்வுத் துறையின்

Updated On :5 நவம்பர் 2018, 9:16 am IST

மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார் மத்திய புலனாய்வுத் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி.
திருச்சி பெல் வளாகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் நிறைவுநாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: மனித இடையூறுகளைக் குறைப்பதால் பொது வாழ்வில் வெளிப்படைத்தன்மைக் கூடுவதுடன் ஊழலை குறைக்க உதவும். தனி, பொதுவாழ்வில் அவரவர் நடவடிக்கைகளில் நேர்மை, நாணயத்தை வளர்ப்பதில் நிறுவனத்தின் ஊழியர் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதை உணர்ந்து அவர்கள் பணியாற்ற வேண்டும். இதற்கென மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊழலை ஒழிக்க வேண்டும். புதிய இந்தியாவைப் படைக்கவும், ஆர்வத்தை தூண்டும் வகையில் நடவடிக்கைகைளை எடுக்க வேண்டும் என்றார் என்.கிருஷ்ணமூர்த்தி.
திருச்சி பெல், திருமயம் மின்னாலைக் குழாய்கள் பிரிவு மற்றும் சென்னை குழாய்கள் மையத்தின் செயல் இயக்குநர் ஆர்.ராஜா மனோகர் தலைமை வகித்துப் பேசியது: கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை அனுசரிப்பது மக்களிடம் நேர்மை, நாணயத்தின் மீதான நம்பிக்கையை வலுசேர்க்க உதவும். வாடிக்கையாளர்களிடம் வெளிப்படைத்தன்மை, பாரபட்சமற்ற தன்மையுடன் பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றார். பெல் நிறுவனம் சார்பில் பல்வேறு கல்வி நிலையங்களில் ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை,  ஓவியம், பேச்சுப் போட்டிகள், வளாகப் பேரணி, குழு விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சிபிஐ கண்காணிப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, கண்காணிப்புத் துறையின் கூடுதல் பொது மேலாளர் எஸ்.தியாகராஜன் வரவேற்றார். துணைப் பொதுமேலாளர் என்.பாஸ்கரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.