திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டில் அதிகபட்சமாக 28.20 மி.மீட்டர் மழை பதிவானது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அதே இடத்தில் நிலைக் கொண்டிருப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, சனிக்கிழமை காலையிலிருந்து திருச்சி மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் அவ்வப்போது லேசான மழைத் தூறல் இருந்தது. காலையிலிருந்து முற்பகல் 11 மணி வரை லேசான மழை காணப்பட்டது. தொடர்ந்து, மாலையில் மீண்டும் மேகங்கள் திரண்டு காணப்பட்டன. இரவு 7 மணிக்கு மேல் மாநகர் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் மழை பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் லேசான மழைநீர் தேங்கிக் காணப்பட்டது. தொடர்ந்து குளிர்ந்த நிலை காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அதிகனமழை பெய்யும் என அறிவித்து பின்னர் திரும்பப் பெறப்பட்ட நிலையில், காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்) : நவலூர் குட்டப்பட்டு 28.20, நந்தியாற்றுத்தலைப்பு 22.40, துவாக்குடி நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம் 17.80, திருச்சி விமான நிலையம் 17.30, கோவில்பட்டி 15.40, பொன்னணியாறுஅணை 14.20, கல்லக்குடி 8.40, மருங்காபுரி 7.20, துறையூர் 6, மணப்பாறை, புள்ளம்பாடி தலா 5.80, பொன்மலை 5.40, லால்குடி, திருச்சி ஜங்சன் தலா 2.20, திருச்சி டவுன், தென்பறநாடு தலா 2. மாவட்டத்தில் சராசரியாக 6.49 மி.மீ. மழையும், மொத்தமாக 162.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : உதயநிதி

பவன் கல்யாணை நேரில் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
