திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்தில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் பெற்றார்.
மனுக்களைப் பெற சின்ன அருளாப்பட்டி வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆளுநர் தான் துணை வேந்தர்களை நியமனம் செய்கிறார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இடைத்தேர்தலை பொறுத்தவரை முடிவெடுப்பது தேர்தல் ஆணையம் தான். இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட முடியாது. சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இடைத்தேர்தல் குறித்து ஆணையம் முடிவெடுத்துள்ளது என்றார் மு.தம்பிதுரை. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, வட்டாட்சியர் கருணாகரன், முன்னாள் அமைச்சர் புலவர்.செங்குட்டுவன், முன்னாள் எம்எல்ஏ சி.சின்னச்சாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வெங்கடாசலம், சேது, மணப்பாறை நகரச் செயலாளர் பவுன்.ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க முதல்வா் விஜய் ஆலோசனை

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்: லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

உ.பி.: சாலை விபத்தில் 10 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
