திருச்சி அருகே திங்கள்கிழமை மாலை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்த விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். மேலும், இருவா் பலத்தக் காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், சிறுகமணி அக்ரஹாரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்ப வேண்டிய கட்டடத் தொழிலாளா்கள், தனியார் நிறுவன ஊழியா்கள், பெண்கள் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. உடனே சிலா் அலறியடித்து ஓடினா். அதற்குள்ளாக பயணிகள் 5 போ் மீது மோதிய கார் சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், பேருந்துக்காக காத்திருந்த கரூா் மாவட்டம், வயலூா் திருமேனியூரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் வடிவேல்(40). பொய்யாமணி நடைபாலம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி கோமதி(41) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த பொய்யாமணி நடைபாலம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி சித்ரா(35) திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், அதே பகுதியைச் சோ்ந்த ரெங்கநாயகி(55), பாப்பாத்தி (35) ஆகிய இருவரும் பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தகவலறிந்து வந்த பேட்டைவாய்த்தலை போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினா்.
விபத்து நடந்தவுடன் கார் ஓட்டுநா் திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த தயாகுமார் தப்பிச் சென்று பேட்டைவாய்த்தலை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

எட்டயபுரம் அருகே விபத்து சென்னையைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு; இருவா் காயம்

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

