திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் கல்லூரி ஆசிரியர்களுக்கான கண் பரிசோதனை திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டப்பிரிவுடன் இணைந்து இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
பல்வேறு சமூக நலத்திட்டங்களை ஏற்கெனவே மேற்கொண்டு வரும் ஜோசப் கண் மருத்துவமனை, எங்களுக்காக வாழும் உங்களுக்காக என்னும் ஆசிரியர்களுக்கான கண் பரிசோதனைத் திட்டத்தை தற்போது தொடங்கியுபள்ளது.
40 வயது மேற்பட்டவர்களுக்கு கண்களில் பல பிரச்னை வர வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ஜோசப் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தினமான புதன்கிழமை மருத்துவமனை வளாகத்தில் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன் நிகழ்வில் பங்கேற்று, திட்டத்தைத் தொடக்கி வைத்து பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வு கையேட்டையும் அவர் வெளியிட்டார்,.
திருச்சி பாரதிதாசன்பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆ. லட்சுமி பிரபா சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் மருத்துவமனை உதவி இயக்குநர் ( மனிதவளம்) ஆர்த்தி ராஜேஷ் மற்றும் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஜோசப் கண் மருத்துவமனையின் துணை இயக்குநர் எம்.பிரதீபா வரவேற்றார். மருத்துவமனை துணை நிர்வாகி சுபா பிரபு நன்றி கூறினார். மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீதர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






