குட்கா ஊழல் வழக்கில் வலுவான ஆதாரம் இருப்பின் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றார் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியின் மாநிலத் தலைவர் வி.எம்.எஸ்.முகமது முபாரக்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும். விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய பாஜக தலைவர்கள், விமர்சித்தவர்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்திரிப்பது தவறாகும்.
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் வியாபாரிகள், பொதுமக்கள் தினந்தோறும் கஷ்டம் அனுபவித்து வருகின்றனர். மக்களின் எண்ணக் குமுறல்கள் 2019 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் பாலம், மதகுகள் உடைந்ததற்கு மணல் திருட்டு தான் பிரதான காரணமாகும்.
தமிழகம் முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு அபாயகரமான உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியது தான் காரணம் என்பதால் மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கோவையில் 5 இளைஞர்கள் மீது யுஏபிஏ பிரிவின் கீழ் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.7) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. புகார் மீது வலுவான ஆதாரம் இருப்பின் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். மறுத்தால் முதல்வர் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
திருச்சியில் அக்.21-இல் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது என்றார் வி.எம்.எஸ்.முகமது முபாரக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலி ஆவணம் தயாரித்து ரூ.38.79 லட்சம் மோசடி: நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை
காரில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இலக்கைத் தாண்டி ரூ.4,900 கோடிக்கு ஏற்றுமதி

அண்ணாமலைப் பல்கலை.யில் நூலகா் தின விழா கொண்டாட்டம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


