மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

வ.உ.சி. பிறந்த நாள்: சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 147-ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 147-ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் புதன்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக : மாநகர் மாவட்ட செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான ப. குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் வெல்லமண்டி என் . நடராஜன், எஸ். வளர்மதி, முன்னாள் அமைச்சர் கே.கே. பி. பாலசுப்பிரமணியன்,  அரசு வழக்குரைஞர் ராஜ்குமார் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.
தி.மு.க : திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன்,  சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்டாலின்குமார் (துறையூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
பா.ஜ.க.: மாநிலத் துணைத் தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் தங்க ராஜய்யன், மண்டல தலைவர் ராஜசேகரன், மற்றும் நிர்வாகிகள் பார்த்திபன், சிட்டிபாபு, செல்வம், சீனிவாசன், முருகானந்தம், ராஜை, கோபிநாத், சரவணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அகில இந்திய வ.உ.சி. பேரவை : மாநிலத் தலைவர் லேணா லட்சுமணன் தலைமையில், மாவட்ட தலைவர் கண்ணதாசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி,  வ.யி. வெங்கடாசலம் பிள்ளை, வையாபுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
காங்கிரஸ் : மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் கலை வழக்குரைஞர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஸ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மா.சரவணன் தலைமையில் பாஜகவைச் சேர்ந்த கோவிந்தன், திமுக வீரராகவன், ஆட்டோ செந்தில்குமார், பாதயாத்திரை நடராஜன், மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
த.மா.கா: மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல், ரவீந்திரன், குணா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன்,  பொருளாளர் கே.டி. தனபால் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.  தேமுதிக சார்பில், மாவட்டச் செயலாளர் டி.வி. கணேசன் தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மாநில அமைப்புச் செயலாளர்கள் மனோகரன், சாருபாலா தொண்டமான், மாநகர செயலாளர் சீனிவாசன் ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.