
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே கலையரங்கம் வளாகத்தில் புதிய திருமண மண்டபத்தை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி புதன்கிழமை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
திருச்சியின் அடையாளமாகத் திகழ்ந்த கலையரங்கம் திரையரங்கமானது தற்போது திருமண மண்டபமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த திருமண மண்டபத்தில் 1,700 பேர் அமரக்கூடிய வசதி உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 350 பேர் உணவு சாப்பிடலாம். புதன்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் கு.ராசாமணி.
மாவட்ட நலப்பணிக் குழுப் பொருளாளர் சேவை கே.கோவிந்தராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜெ.ஜெ.எல்.ஞானராஜ், வி.ஜெயபால், வாழ்நாள் உறுப்பினர்கள் ஆ.வ.ராஜகோபால், மருத்துவர் எம்.ஏ. அலீம், சிவானி கல்வி குழுமத் தலைவர் பி. செல்வராஜ், மாவட்ட நலப்பணிக்குழு உறுப்பினர் ரெ.சிங்காரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





