மத்திய கள விளம்பரத் துறையின் துணை இயக்குநர் ஏ. இளங்கோவன் (58)சனிக்கிழமை காலமானார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள பூலாஞ்சேரி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், கருமண்டபம் ஸ்ரீராம் நகரில் வசித்து வந்தார். இவர், அகில இந்திய வானொலியில் திருச்சி செய்தியாளராக பணியாற்றினார். பிறகு, பதவி உயர்வு பெற்று சென்னை, அகில இந்திய வானொலி நிலையத்தில் மத்திய கள விளம்பரத் துறையின் துணை இயக்குநராகவும், திட்டம் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சனிக்கிழமை நள்ளிரவு காலமானார். இதனையடுத்து அவரது உடல் திருச்சியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை கருமண்டபம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், நிவேதிதா என்ற மகள், கேசவ்குமார் என்ற மகனும் உள்ளனர்.
தொடர்புக்கு : 98656- 64766
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


